மீண்டும் ஹாரர் காமெடியில் மிரட்ட வரும் சந்தானம்... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

santhanam

ஹாரர் காமெடியில் உருவாகி வரும் சந்தானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  

நடிகர் சந்தானத்தின் ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சந்தானத்தின் நடிப்பில் புதிய ஹாரர் காமெடி திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தை பிரேமானந்த் என்பவர் இயக்கி வருகிறார். சந்தானத்தின் வழக்கமான காமெடியுடன் திகிலுடன் இப்படம் உருவாகி வருகிறது. 

santhanam

ஷேம்லஸ் சதீஷ் என்ற  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கதாபாத்தில் சந்தானம் நடிக்கிறார். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் பிரபல நடிகை சுரபி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் புதுச்சேரி பிரெஞ்சு பெண்ணாக நடிக்கிறார். இவர்களுடன் ரெடி கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன், சங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

 இந்நிலையில் ஆர்கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த போஸ்டரில் சந்தானம் மிரட்டலான லுக்கில் இருக்கிறார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story