பேயுடன் கேம் விளையாடும் சந்தானம்.. ஹாரர் காமெடியில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ டிரெய்லர் !

DDReturns

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

சந்தானத்தின் வழக்கமான ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. பிரேமானந்த் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

DD Returns

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுரபி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்ட ராஜேந்திரன், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். 

DD Returns

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள அந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் எப்போதும் போல் பேய் பங்களாவில் நடக்கும் பேய் கதை தான் இந்த படம். பெரிய பங்களாவில் ஒன்றில் பேய்கள் நடத்தும் கேம் ஷோவில் சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் மாட்டிக் கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது படமாக உருவாகியுள்ளது.

 

Share this story