சந்தானம் - கல்யாண் கூட்டணியில் உருவாகும் பில்டப்

சந்தானம் - கல்யாண் கூட்டணியில் உருவாகும் பில்டப்

சந்தானம் நடிக்க உள்ள புதிய படத்திற்கு பில்டப் என தலைப்பு வைத்து, முதல் தோற்றத்தை படக்குழு வௌியிட்டு உள்ளது.

சந்தானம் - கல்யாண் கூட்டணியில் உருவாகும் பில்டப்

சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தொடர்ந்து தனது கடின உழைப்பு காரணமாக காமெடி நடிகராக உயர்ந்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கலக்கிய அவர் தற்போது ஹீரோ டிராக்கில் பயணித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சந்தானம் நடிக்க உள்ள அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிக்கின்றனர்.  பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில், பிரீத்தி ராதிகா நாயகியாகவும், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின்கிங்ஸ்லி, தங்கதுரை, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
 

Share this story