நாளை காத்திருக்கும் சம்பவம்... சந்தானம் படத்தின் முக்கிய அறிவிப்பு !

காமெடி கதைக்களங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், அடுத்து நடித்துள்ள திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் முதல்முறையாக கன்னடத்தில் சந்தானம் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். நடிகை ராகினி திரிவேதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சர்க்கல் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள உள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 7.02 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.