சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்த சந்தானம்... அசத்தல் அறிவிப்பு !

santhanam

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். ரஜினி, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். இவரது காமெடி கலாட்டாவில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

santhanam

இதையடுத்து காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘குலு குலு’ மற்றும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க கவனம் செதுத்தி வருகிறார். 

அந்த வகையில் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் ‘ஓ பேபி’. ‘குட்டாச்சாரி’. ‘கார்த்திகேயா 2’, ‘தமாகா’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. முதல்முறையாக தமிழில் சந்தானத்தின் படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கான முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story