சந்தானத்தின் ‘கிக்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

சந்தானம் நடிப்பில் வெளியான ‘கிக்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியான படம் ‘கிக்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து தான்யா ஹோம், தம்பி ராமையா, கோவை சரளா, மன்சூர் அலிகான், ஓய்.ஜி மகேந்திரன், கூல் சுரேஷ் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அர்ஜூன் இசையமைத்திருந்தார்.ரொமான்ஸ் காமெடி கதைகளத்தில் உருவான இந்த படம் எதிர்பார்த்த விமர்சனம் மற்றும் வசூலை பெற தவறியது. சந்தானம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை இந்த படம் கொடுத்தது.

இந்த நிலையில் கிக் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி படம்  நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படம் தமிழ், மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவாது குறிப்பிடத்தக்கது.

Share this story