சந்தானம் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்த அப்டேட்.

photo

நடிகர் சந்தானம் நடிக்க உள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

photo

சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தொடர்ந்து தனது கடின உழைப்பு காரணமாக காமெடி நடிகராக உயர்ந்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கலக்கிய அவர் தற்போது ஹீரோ டிராக்கில் பயணித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சந்தானம் நடிக்க உள்ள அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிக்கின்றனர்.  பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Share this story