சந்தானம் நடிப்பில் உருவாகும் DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்
சந்தானம் நடிப்பில் உருவாகும் DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
From the makers of #DhillukuDhuddu Franchise
— Santhanam (@iamsanthanam) January 20, 2025
Comes the most ROFL horror-com there is!
Get ready for
NEXT LEVEL bayam 😱
NEXT LEVEL bangam 😂#DDNextLevel - First look tomorrow at 10 AM 🔥@arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001… pic.twitter.com/qe1v4q14M9
மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன் , செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.