மிரட்டலாக வெளியாகும் சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.. ரிலீஸ் & டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

DDReturns

 சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரேமானந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் பிரபல நடிகை சுரபி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடி கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன், சங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

DDReturns

ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஷேம்லஸ் சதீஷ் என்ற  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கதாபாத்தில் சந்தானம் நடிக்கிறார். ஆர்கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. சந்தானத்தின் வழக்கமான காமெடியுடன் திகிலுடன் இப்படம் உருவாகியுள்ளது.

DDReturns

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story