முழு நீள காமெடிப்படமாக உருவாகியுள்ள ‘கிக்’... சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

kick

முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள சந்தானத்தின் ‘கிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னடத்தில் வெளியான ‘லல் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’. பிரபல கன்னட இயக்குனராக இருக்கும் அவர், இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். நடிகர் சந்தானம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

kick

சந்தானத்திற்கு ஜோடியாக ‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

kick

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதமே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகிறது. 

 

 

Share this story