புலி வாலை பிடித்த சர்ச்சை.. சந்தானத்தை விளாசிய பிரபல நடிகை !

santhanam

புலி வாலை பிடித்த விவகாரத்தில் சந்தானத்தின் செயலை பிரபல நடிகை கடுமையாக விளாசியுள்ளார். 

பிரபல நடிகரான சந்தானம் புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற உயிரியல் பூங்கா ஒன்றிற்கு சென்ற அவர், புலி வாலை பிடித்தப்படி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கேப்ஷனாக இதுதான் புலிவாலை பிடிக்கிறது என்பதா என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

santhanam

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சந்தானத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வனவிலங்குகளை துன்புறுத்துவதை சந்தானம் ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விலங்குகள் நல அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

santhanam

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மி கௌதம் வெளியிட்டுள்ள பதிவில், அந்த புலி மீது உங்களுக்கு எந்த பரிதாபமும் ஏற்படவில்லை ? மயக்கத்தில் இருக்கும் புலியை தொந்தரவு செய்ததால் அது எழுந்தது. நீங்கள் வலிமையான மனிதர் என்பதை காட்டுவதற்காக இப்படி செய்தீர்களா ?. உங்கள் உணர்திறனை இழந்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

 


 

Share this story