கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம்..?
1746617813824
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கவுதம் மேனன் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சந்தானத்துடன் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் கவுதம் மேனன் நடித்ததற்கு கூடுதல் காரணம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, விஷாலிடம் ஏற்கனவே அவர் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் அல்லாமல் சந்தானத்திற்கும் ஒரு புதிய கதையை கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்த நிகாரிஹா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றனர்.

