ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்த சந்தானம்... ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினரின் அசத்தல் அறிவிப்பு !

VadakkupattiRamasamy

 சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கிக்’ படத்திற்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தை ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். 

VadakkupattiRamasamy

இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். நகைச்சுவை ஜாம்பவான்கள் கவுண்டமணி - செந்திலின் புகழ்பெற்ற காமெடியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற வித்தியாசமான பெயரில் இந்த படம் உருவாகுவதால் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகிறது என தெரிகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. 63 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் தயாரிப்பு பணிகளை தொடங்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

Share this story