சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்...!

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
A chapter from the life of a Thug Film Reviewer - #Kissa47 🔥
— Santhanam (@iamsanthanam) February 26, 2025
Loved making this song a lot and vibed to it! Hope you love it too
▶️ https://t.co/oFqy7LBqHM
Happy Mahashivaratri
An @ofrooooo Musical. Lyrics #Kelithee #DDNextLevel in Cinemas May 2025 #DhillukuDhuddu… pic.twitter.com/wABduf99iv
இந்நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் முதல் பாடலான 'கிஸ்சா 47' அறிவித்தபடி இன்று (பிப்ரவரி 26) காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. பக்திப் பாடலுடன் பியூஷனாக உருவாகியுள்ள இந்த பாடல் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.