பிரபாஸூக்கு பரிசு தயார் - சந்தோஷ் நாராயணன்
1707478954926
கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் ‘இந்தியன்2’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆரு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் நாராயணன், பிரபாஸூக்கு இப்படத்தில் எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.