மகிழ்ச்சிக்கு அளவில்லை - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி

மகிழ்ச்சிக்கு அளவில்லை - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி

2012ல் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். அதன்பிறகு பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறைவி, இறுதிச்சுற்று, கொடி, கபாளி, காலா, மேயாத மான், பரியேறும் பெருமாள், வட சென்னை, ஜிப்ஸி என  இவர் இசையமைத்த அனைத்துப் படங்களிலுமே பாடல்கள் பயங்கர ஹிட்.  முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.

1983ல் இதே மே 15ல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த சந்தோஷ் நாராயணன்,  அங்கேயே பள்ளிப் படிப்பையும், ஜேஜே கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் ஒலிப்பதிவு பொறியாளராக பணியாற்றினார். பின்னர் இண்டிபெண்டண்ட் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பல பாடல்களுக்கு இசையமைத்தார். 2008ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான நேனு மீக்கு தெலுசா? படத்திலும் அதன் தமிழ் பதிப்பான என்னை தெரியுமா ? படத்திற்கும் பின்னணி இசையமைத்தார். அண்மையில் வௌியான ஜிகர்தண்டா 2 படத்திற்கு இசை அமைத்திருந்தார்.


தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பாராட்டி பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றும், சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
 

Share this story