சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

santhosh-prathap-33

சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தோஷ் பிரதாப் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதையடுத்து தாயம், தேவ், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். சர்பட்டா பரம்பரை படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சந்தோஷ் பிரதாப் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dear death

இந்தப் படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கி உள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை எஸ் என் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு டியர் டெத் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் எமன் கையில் ஒரு எலும்புக்கூடை வைத்திருப்பதாகக் காணப்படுகிறது

Share this story