‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படம் வெளியாகி 17 ஆண்டு நிறைவு...!

santhosh subramaniyam

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.  

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் ஜெனிலியா நடிப்பில் 2008-ம் ஆண்டு ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் வெளியான பொம்மரிலு படத்தின் ரீமேக் ஆகும். அப்பா- மகன் பாசப் போராட்டம், ஜெனிலியாவின் துருதுரு கதாபாத்திரம் என குடும்ப ரசிகர்களை இந்தப் படம் வெகுவாகக் கவர்ந்தது.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


 இன்றளவும் இந்த படத்திற்கும் அதில் இடம்பெறுள்ள பாடல்களுக்கும்  தனி ரசிகர்களே உண்டு என கூறலாம். இந்நிலையில், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.  இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்காக ஜெனிலியா, ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கும் மோகன் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Share this story