சாரா நடித்த 'மேஜிக்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்..!

’தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக ’நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா.
2011-ம் ஆண்டில் வெளியான `தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா. அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ’சைவம்' படத்தில் சாரா நடித்தார். 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து இருந்தார்.
#DontKnowWhy brings the right vibe to your Valentine’s celebrations ♥️♥️
— Sithara Entertainments (@SitharaEnts) February 14, 2025
Light up your day with this soulful melody! 😍💯🫶🏻#Magic First Single Out now 🤩
[Telugu] - https://t.co/Kig9KorscV
[Tamil] - https://t.co/yHCHzlu2ck
A @anirudhofficial’s vibe 💯
🎤 #Anirudh… pic.twitter.com/1LMnkSl1Bx
இவர் தற்போது நடித்து வரும் படம் ’மேஜிக்'. பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை நானியின் 'ஜெர்சி' விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' பட இயக்குனர் கவுதம் தின்னனுரி எழுதி இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், மேஜிக் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'டோண்ட் நோ வை' என்ற பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்.