சிலை கடத்தல் குறித்து பேசும் ‘பரம்பொருள்’.. சரத்குமார் பிறந்தநாளையொட்டி டீசர் வெளியீடு !
அமிதாஷ் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள பரம்பொருள் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரம்பொருள்’. இந்த படத்தில் முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் அமிதாஷ் பிரதான் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அமிதாஷ், தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்தவர்.
இந்த படத்தில் நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் துவங்கியது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் பிறந்தநாளையொட்டி இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் குறித்து பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். அதேபோன்று கடத்தப்படும் சிலைகளை போலீசார் மீட்கும் போது அவற்றை ஆய்வு செய்யும் அதிகாரியாக மிதாஸ் பிரதான் நடித்துள்ளார். சரத்குமார் - அமிதாஷ் இடையே நடக்கும் சுவாரஸ்சியமான சம்பவங்களின் கோர்வையே இந்த படம்.