அடுத்த படத்திற்கு நியூ லுக்கில் தயாரான ‘சரவணன் அருள்’ – வெளியான மாஸ் புகைப்படம்.

photo

ஜவுளி துறையில் தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கி வெற்றி நடை போட்டு வருபவர் சரவணன் அருள். இவர் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த நிலையில் இவர் தனது அடுத்த படத்திற்காக தயாரானதை மாஸ் லுக்கை வெளியிட்டு, விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.

photo

photo

தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.  அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா உடன் ஜோடிபோட்டு நடித்து ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.

photo

photo

இந்த நிலையில் அண்ணாச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் மாஸ்ஸாக கோட் சூட் போட்டு, கண்ணாடி அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கேப்ஷனில் அடுத்த படத்திற்கு புதிய கெட்டப், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் அவரை மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story