சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் ‘லெஜண்ட் சரவணன்’!

photo

பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், அடுத்து யார் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

சரவணன் அருள் ‘லெஜன்ட்’படத்தின் மூலமாக சினிமாவுக்குள் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கியிருந்தனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் சரவணனின் முயற்சியயை பலரும் பாராட்டினார்கள்.

இந்த சரவணன் அருள் அடுத்து எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. அதன்படி அவர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் தனுஷின் கொடி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. தொடர்ந்து படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story