சர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு... சர்தார் 2 குறித்து அப்டேட்...

சர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு... சர்தார் 2 குறித்து அப்டேட்...

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளி வாழ்க்கை குறித்தும் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் திரையங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமரசனங்களை பெற்றது. அதனால் உலகம் முழுவதும் 47 கோடியும், தமிழகத்தில் 34 கோடியும் வசூல் சாதனை படைத்தது. 

இந்நிலையில், சர்தார் முதல் பாகம் வெளியாகி ஒரு  ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை, நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி  தெரிவித்துள்ளார். மேலும், சர்தார் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில் வௌியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story