ரெட்டை வேடங்களில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2-பட விமர்சனம்

karthi

ரா ஏஜெண்ட் விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (இன்னொரு கார்த்தி) கடந்த காலத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான மிஷனுக்குள் கொண்டு வரப்படுகிறார். மக்கள் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை அவர்கள் தடுத்தார்களா என்பது மீதி கதை.

விஜய் பிரகாஷ், சர்தார் சந்திரபோஸ் ஆகிய இரட்டை வேடங்களில் வசன உச்சரிப்பு, பாடிலாங்குவேஜ், நடிப்பு ஆகிய விஷயங்களில் வித்தியாசம் காட்டியுள்ள கார்த்தி, ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து அடித்திருக்கிறார். அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர், இயல்பான நடிப்பில் கவனத்தை ஈர்க்கின்றனர். வில்லன் எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல் நான்-ஸ்டாப்பாக வசனம் பேசி மிரட்டினாலும், சில நேரங்களில் அது மிகையாகி விடுகிறது. நாசர், யோகி பாபு, நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், ஆஷிஷ் வித்யார்த்தி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, பாபு ஆண்டனி உள்பட பலர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்திருக்கின்றனர்.

Share this story