‘சர்தார் 2’ பணிகள் துவக்கம் – அடுத்தடுத்து வெளியான அப்டேட்.
கார்த்தி நடிப்பில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்த திரைப்படம் ‘சர்தார்’. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, முனிஷ்காந்த், அவினாஷ், முரளி சர்மா, மாஸ்டர் ரித்விக் என பலர் நடித்திருந்தனர். குறிப்பாக சங்கி பாண்டே வில்லனாக மிரட்டியிருந்தார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போதே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை மித்ரன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியான வண்னம் உள்ளது. அதன்படி, இரண்டாவது பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். அதுமட்டுமல்லமல் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளாராம். இந்த தகவல் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.
சர்தார் படத்தின் கதைகளம் தண்ணீர் பிரச்சனையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது. அதேப்போல இரண்டாம் பாகத்தையும் பி.எஸ் மித்ரன் பொது பிரச்சனையை மைய்யமாக வைத்து இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.