படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் ‘சர்தார்2’ அப்டேட்!...

photo

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகவுள்ள சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

photo

பி.எஸ் மிதரன் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த படம் சர்தார். கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கிவிட்டதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.  மேலும் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் எஸ்.ஜே  சூர்யா நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Share this story