சர்தார் 2ம் பாகத்தில் இணைந்த ஆஷிகா ரங்கநாத்
1722931515000
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகிறது. இந்த பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் எடுக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் இணைந்தது தொடர்ந்து இப்போது இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் தெலுங்கில் நா சாமி ரங்கா, அமிகோஸ் ஆகிய படங்களில் நடித்தவர் தமிழில் ஏற்கனவே பட்டத்து அரசன் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.