கார்த்தியின் சர்தார் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா ?

karthi

கடந்த 2021ல் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து திரைக்கு வந்த படம், ‘சர்தார்’. இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவர்கள் ‘சர்தார்’ படத்தின் 2வது பாகத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று கார்த்தி அறிவித்துள்ளார்.
மேலும், கார்த்தி படங்களுக்கு தெலுங்கில் அமோக வரவேற்பு இருப்பதால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியிடப்படுகிறது. அதுபோல், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள ‘ரணபாலி’ என்ற படம், வரும் செப்டம்பர் 11ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கில் கார்த்தி, விஜய் தேவரகொண்டா படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபீசில் கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

Share this story