சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு

சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு


சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு, கங்கை அமரன், இளையராஜா என இசை வாரிசாக தமிழ் சினிமா வட்டாரத்திற்கு அறியப்பட்டிருந்தாலும், இவர் முதன் முதலில் சினிமாவுக்குள் ஹீரோவாகத்தான் அறிமுகமானார். ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்த வெங்கட் பிரபு அதன் பின்னர் தன்னுடைய சினிமா பாதையை இயக்குனராக மாற்றிக் கொண்டார். வெங்கட் பிரபுவின் படம் என்றாலே சிரிப்புக்கும், நட்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதே நிதர்சனம். அவரது படைப்பில் சரோஜா திரைப்படம் ஒரு பென்ச்மார்க் என்றே சொல்லாம்...

சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு

சென்னை 28க்கு பிறகு அதே வெற்றி கூட்டணியை வைத்து வெங்கட் பிரபு 2008-ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் சரோஜா. எதிர்பாராத விதமாக சந்திக்கும் நண்பர்கள் கிரிக்கெட்டை நேரில் பார்க்க ஸ்டேடியத்திற்கு செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை காமெடியாக சொல்லி இருப்பார். பாடல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் சரோஜா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பிரேம்ஜி, வைபவ், சிவா, காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ், ஜெயராம், எஸ்.பி.சரண் என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது. இது  தவிர, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. கோடான கோடி உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ். 

இந்நிலையில், சரோஜா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் மும்பையில் கொண்டாடியுள்ளனர். நடிகர், நடிகைகள் மட்டுமன்றி கோலிவுட் ரசிகர்களும சமூக வலைதளங்களில் சரோஜா புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். 
 

Share this story