200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சரோஜா தேவி காலமானார்

sarojadevi
கன்னடத்து பைங்கிளி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சரோஜா தேவி காலமானார் .
இவர் வயது மூப்பு பிரச்சினையால் நோயுற்றதால் தன் 87வது வயதில் பெங்களூரில் மறைந்தார்.இவர்  200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் எம்ஜியாருடன் 26 படங்களில் நடித்துள்ளார் .இவர் கடைசியாக தமிழில் 2009ம் ஆண்டு ஆதவன் படத்தில் நடித்துள்ளார் .மேலும் இவர் ஜெமினி கணேசனுடன் நடித்த கல்யாண பரிசு படம் மாபெரும் வெற்றி பெற்றது .இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி பல படங்களில் இணைந்து நடித்தனர் .இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தார் .அங்கு அவர் காலமானார் .இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது .இதனை தொடர்ந்து பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

Share this story