ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட... ‘சார்பட்டா Round 2’ அறிவிப்பு !

SarpattaParambarai2

பா ரஞ்சித்தின் ‘சார்ட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.  1970-களின் பிற்பகுதியில் வடசென்னையில் இரண்டு பரம்பரைக்கு இடையே நடக்கும் குத்துச்சண்டைப் போட்டிகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்றது. 

SarpattaParambarai2

இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிகர் ஆர்யா நடித்திருந்தார். கதாநாயகியாக துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

SarpattaParambarai2

இந்நிலையி​ல்​ இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Match பாக்க ready-யா?.. ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சர்பட்டா பரம்பரை ரவுண்ட் 2  விரைவில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலம் பிரொக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திலும் ஆர்யாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித், அதை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

Share this story