மாஸ்கோவில் ‘சார்பட்டா பரம்பரை’ – மற்றுமொரு அங்கீகாரம்.

photo

 ‘சார்பட்டா பரம்பரை 2’ விரைவில் உருவாகவுள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ள தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

வட சென்னையில் பிரபலமாக திகழ்ந்த  குத்துசண்டையை மைய்யமாக வைத்து தயாரான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ ஆர்யா நடித்து பா.ரஞ்சித் இயக்கி வெளியான இத்திரைப்படம் கோவிட் சமயத்தில் வெளியானதால் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில், துஷாரா விஜயன். பசுபதி, கலையரசன், ஜான் கொகேன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

photo

இந்த  நிலையில் மாஸ்கோவில் நடக்கும் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், சார்பட்டா பரம்பரை திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இதற்காக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Share this story