‘சரண்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சரண்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார். தற்போது அவர் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
Launching the first look of @TharshanShant 's next #Surrender!
— VijaySethupathi (@VijaySethuOffl) March 13, 2025
A New Cop in Tamil cinema. #UpbeatPicturesProductionNo1 @upbeatpictures @iamgowth @LalDirector @Sujithshankers @padinekumar_ofl @meyyendira #RenuGopal @vikasbadisa #ManojkumarK @dineshashok_13 @ProRekha… pic.twitter.com/CMVjbkhWyM
‘சரண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் க்ரைம் – ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. விக்டர் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கெளதமன் கணபதி இயக்கி இருக்கிறார். இவர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு இசையமைப்பாளராக விகாஸ் பதீசா, ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.