மூன்று நாயகிகளுடன் உருவாகும் புது படம் -யார் ஹீரோ தெரியுமா ?
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள ஆர்.ரவீந்திரன், தனது டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை 6 டைமன்ஷன்ஸ் பிலிம்ஸ், மீடியா எல்எல்பி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த சுல்தான் ஜசானி, சேத்தன் தியோலேகருடன் இணைந்து தயாரிக்கிறார். கன்னட இயக்குனரும், பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் எழுதி இயக்கும் குடும்ப திரில்லர் படமான இதில் சசிகுமார், சுவாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், நரேன் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. முக்கிய வேடங்களில் ஹரிஷங்கர், ஹரீஷ் பெராடி, பி.எல்.தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக், வசந்தி குரு நடிக்கின்றனர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் குறித்து ஹரி சந்தோஷ் கூறுகையில், ‘இது ஒரு புதுமையான குடும்ப திரில்லர் கதை. இதர அம்சங்களை சரியான விகிதத்தில் சேர்த்து, பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வழங்குகிறோம்’ என்றார். ஜிப்ரான் வைபோதா இசை அமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

