'டூரிஸ்ட் பேமலி' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சசிகுமார்

sasikumar

அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்துள்ளனர்.சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி, கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் தற்போது 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 5-வது படமாக உருவாகியுள்ள 'டூரிஸ்ட் பேமிலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். யோகி பாபு, மிதுன் ஜெய்சஙகர், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சசிகுமார் 'டூரிஸ்ட் பேமலி' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story