வெப் தொடராக உருவாகும் ‘குற்றப்பரம்பரை’... விரைவில் தொடங்கும் பணிகள் !

kutraparambarai

 சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘குற்றப்பரம்பரை’ நாவல் விரைவில் வெப் தொடராக உருவாகவுள்ளது. 

இந்தியாவில் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று ‘குற்றப்பரம்பரை’. பிரபல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய இந்த நாவலை, பல பேர் சினிமா படமாக உருவாக்க முயற்சி எடுத்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து பிரபல இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. 

kutraparambarai

இதையடுத்து ‘குற்றப்பரம்பரை’ நாவலை வெப் தொடராக எடுக்க இயக்குனர் சசிகுமார் திட்டமிட்டுள்ளார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இந்த படத்தில் திரைக்கதை, வசனம் எழுவதோடு அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் முக்கிய நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. 

kutraparambarai

இவர்களுடன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த வெப் தொடரை தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள மலை கிராமங்களில் பகுதிகளில் விரைவில் தொடங்கவுள்ளது. 

 


 

Share this story