சசிகுமார் நடித்த 'நந்தன்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
நந்தன் திரைப்படத்தினை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார்.'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'அயோத்தி' வெற்றிப்படமாக அமைந்ததுடன் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார்.
#Nandhan releasing in theatres on September 20th #NandhanFromSep20 @erasaravanan film
— M.Sasikumar (@SasikumarDir) August 28, 2024
Music by @GhibranVaibodha @thondankani #BalajiSakthivel @suruthisamy8 @saranRV1 @EraEntertain @proyuvraaj pic.twitter.com/IW0lWBKMSU
சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தநிலையில், 'நந்தன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.