சுந்தர பாண்டியன் பாடலை Re - Create செய்த சசிகுமார்...`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது. `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அண்மையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. தற்போது படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சுந்தர பாண்டியன் பாடலை Re - Create செய்துள்ளனர்.