'எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்……' - எமோஷனல் ஆன சசிகுமார்.

photo

சசிகுமார் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானஅயோதிதிரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் சசிகுமாரின் பேச்சு பலரது கவனம் ஈர்த்துள்ளது.

photo

அதில் அவர் பேசியதாவதுபடம் பார்த்த எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னது சந்தோஷமா இருந்தது.‌ இந்த படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லைஅதனால் படம் வந்ததே பலருக்கு தெரியல. நான் உதவி இயக்குநரா வேலை செய்தசேதுதிரைப்படமும் சரி, எனது முதல் படமானசுப்பிரமணியபுரம்திரைப்படமும் சரி மெதுவாதான் வரவேற்பு கிடைச்சது.

photo

எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான் பாலுமகேந்திரா சார் , மகேந்திரன் சார், பாலசந்தர் சார் இவங்க இருந்திருந்தா, இந்த படத்தை போட்டு காட்டியிருப்பேன். மகேந்திரன் சார்நண்டுஎன ஒரு படம் எடுத்தார் எத்தனை பேருக்கு இது தெரியும் என்ரு தெரியவில்லை. அதில் இதே போல் இந்தி கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார் அவர். ஆனால், தயாரிப்பாளர் அதை வைக்க ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும்  என நம்புகிறேன். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றிஎன மிகவும் எமோஷனல் ஆகி பேசியுள்ளார் சசிகுமார்

Share this story