சசிகுமார் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘நா நா’... டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு !

naa naa

 சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நா நா’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

முதல்முறையாக நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘நா நா’. இந்த படத்தை ‘சலீம்’ பட்த்தின் இயக்குனராக அறிமுகமான நிர்மல் குமார் இயக்கியுள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

naa naa

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story