நா சிங்கமா.. ஆடான்னு கேட்டா... சசிகுமாரின் ‘நா நா’ டிரெய்லர் வெளியீடு !
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நா நா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
‘சலீம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நா நா’. இரட்டை கதாநாயகர்களை கொண்ட இந்த படத்தில் முதல்முறையாக சசிகுமாரும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கில் நடித்து வரும் சித்ரா சுக்லா இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் பாரதிராஜா, டெல்லி கணேஷ், மயில்சாமி, ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கடைசிக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒருவன் இந்த சமூகத்தால் எப்படி உருமாறுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.