இங்க வாழ்றதுக்கே அதிகாரம் தேவை - சசிகுமார் நடித்த நந்தன் டிரைலர்
'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. டிரைலர் காட்சிகளில் மிகவும் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சசிகுமார். ஒரு கிராமத்தில் நடக்கின்ற எமோஷனலான அரசியல் கதைக்களத்தை ஒட்டி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.