சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!

சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லரை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர்களின் வாழ்வை நகைச்சுவையுடன் பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது.
Presenting the TRAILER of the most Awaited, Hilarious & wholesome Feel-Good Family Entertainer - #TouristFamily 🤗❤️
— atlee (@Atlee_dir) April 23, 2025
Watch Trailer 🔗 https://t.co/laiL7aOlUJ
Grand Release in Theatres Worldwide on MAY 1st 🌟
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶… pic.twitter.com/QQnfqIhVWC
தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை இயக்குனர் அட்லி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரெய்லரில், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்து தப்பிக்க போராடும் குடும்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தை வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.