சசி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்?
1742024744681
இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிச்சைக்காரன் படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் சசி. சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை அடுத்து இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும் என்று கூறப் படுகிறது.
இதையடுத்து சசி இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

