மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் சசிகுமார்?

sasikumar

 'சுப்ரமணியபுரம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. அதன் பின்னர், இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார் சசிகுமார்.பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.மேலும் சமீபத்தில் வெளியான 'அயோத்தி மற்றும் கருடன்' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன.இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த, 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தினை 'உடன்பிறப்பே' என்ற படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார்.சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி சக்திவேல் வில்லனாக நடித்துள்ளார்.

Sasikumar

இந்தநிலையில் சசிகுமார், தான் தற்போது நடித்து வருவதாகவும், தனது அடுத்த திட்டம் இயக்குனராக மீண்டும் அவதாரம் எடுக்க போவதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கான கதை எழுதி முடித்துவிட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு மீண்டும் இயக்கத்திற்கு திரும்புவேன் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share this story