வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ்-ல் நடிக்கும் சசிகுமார்!

sasikumar

நடிகரும் இயக்குனருமான சசிகுமார், வதந்தி சீசன் 2 கிரைம் திரில்லர் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான 'அயோத்தி' ’கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து அபிஷன் இயக்கத்தில் ’டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், ராஜு முருகன் இயக்கத்தில் மை லார்ட்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.vadhandthi
 
இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியான ’வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது உருவாக உள்ள 2-வது சீசனில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

Share this story

News Hub