அதிரடியாக ஷூட்டிங்கை முடித்த சதீஷ்.. ‘வித்தைக்காரன்’ படத்தின் முக்கிய அப்டேட்
‘நாய் சேகர்’ படத்திற்கு பிறகு பிரபல காமெடி நடிகர் சதீஷ், ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் ‘வித்தைக்காரன்’. இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளனர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மெஜிசியனாக இருக்கும் சதீஷ், விமான நிலையத்தில் சிக்கும் வைரத்தை கொள்ளையடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இது குறித்து வெளியாகியுள்ள டீசர் வரவேற்பை பெற்றுள்ளது.