சதிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘வித்தைக்காரன்’.. டீசரை வெளியிடும் பிரபல நடிகை !

vithaikkaaran

 சதிஷ் நடிப்பில் உருவாகும் ‘வித்தைக்காரன்’ படத்தின் டீசரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி நடிகர்களின்‌ திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.  கடந்த ஆண்டு வெளியான 'நாய் சேகர்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக ‘வித்தைக்காரன்’ படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கி வருகிறார். 

vithaikkaaran

இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளனர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார்.

vithaikkaaran

செஸ் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 22-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Share this story