சதீஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம்.... முஸ்தபா, முஸ்தபா...

சதீஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம்.... முஸ்தபா, முஸ்தபா...

சதீஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

நாய் சேகர், வித்தைக்காரன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள சதீஸ், அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரவீன் சரவணன் இயக்கும் புதிய படம் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தில் சதீஸூடன் இணைந்து, சுரேஷ் ரவியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோ, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவர்கள் இருவர் தவிர, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். மாபகோஸ் கம்பெனி இந்த படத்தை தயாரிக்கிறது ஜோன்ஸ் ரூபட் இதற்கு இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில், படத்திற்கு முஸ்தபா முஸ்தபா என தலைப்பு வைத்து, படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது

Share this story