டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ்.. ‘அங்காரகன்’ மிரட்டல் லுக் !

Angaaragan

நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் உதவிய இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’. இந்த படத்தில் டெரர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் மோசமான வில்லனாக நடித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

Angaaragan

இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் ஸ்ரீபதி நடித்துள்ளார். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள இளம் நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் இப்படத்தை தயாரித்துள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டலான லுக்கில் சத்யராஜ் உள்ளார். ஒரு பயங்கரமான பேய் பங்களா முன்பு சத்யராஜ் நிற்கிறார். பின்புறமாக இருக்கும் அந்த லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story